போலீஸ் கண் முன் அடித்து பொளக்கப்படும் சேர்கள் | Tender | Muthukulathur
ராமநாதபுரம், முதுகுளத்தூர் பேரூராட்சியில் புதிதாக சந்தை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் வியாழன்று சந்தை நடக்கும். கமுதி, முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர்,பரமக்குடி, கமுதியை சேர்ந்த 500க்கு மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைப்பார்கள். புதிய சந்தை கட்டடங்களில் கடை நடத்த பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது. வாரச்சந்தை டெண்டர் எடுப்பதற்கான ஏலத்தில் 37 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். அவர்களை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பி வைத்தனர். 17 லட்சத்தில் தொடங்கிய ஏலம் 38 லட்சம் ரூபாய் வரை சென்றது. கடைசியாக செந்தில் முருகன் என்பவர் 36 லட்சத்துக்கு ஏலம் எடுக்க முன்வந்தார்.
டிச 20, 2024