மியான்மர் பூகம்பத்தில் பதறவைக்கும் மர்மம் myanmar earthquake mystery | sagaing fault | bangkok video
உலகையே உலுக்கிப்போட்டு இருக்கிறது, மியான்மர் பூகம்பம். சில நொடிகள் தான் எல்லாம் முடிந்து விட்டது. வானுயர் கட்டடங்கள் பொலபொலவென சரிந்தன. வீடுகள், பாலங்கள், கோபுரங்கள், மாடமாளிகைகள் அப்படியே விழுந்தன. நீச்சல் குளங்களில் ததும்பிய நீர் குபீரென பீறிட்டு வெளியே பாய்ந்தது. வாகனங்கள் அணிவகுத்த ரோடுகள் துண்டு துண்டாக பிளந்தன. பல ஆண்டு தாக்குப்பிடித்த கம்பீர பாலம் கூட நொடியில் இருந்த தடம் தெரியாமல் போனது. தகர்ந்து விழுந்த கட்டுமானங்கள் பல நூறு மக்களை உயிருடன் அமுக்கியது. விதவிதமான கனவுகளை சுமந்த அப்பாவி மக்கள் இடிபாடுகளில் மூச்சடங்கி உயிருடன் சமாதி ஆகினர். கொத்து கொத்தாக மரணம் நேர்ந்தது. முதலில் 200 என்றார்கள். பின்னர் 400, 600 என்று எகிறியது. இப்போது ஆயிரத்தை தாண்டி விட்டது என்ற தகவல் நடுங்க வைக்கிறது. உலகை உலுக்கும் மியான்மர் மரண ஓலம் இன்னும் நின்றபாடில்லை. மொத்த மரணம் பத்தாயிரத்தை தாண்டிவிடும் என்கிறது அமெரிக்க விஞ்ஞானிகள் ரிப்போர்ட்.