சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியது அம்பலம்
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மைசூரு நகர மேம்பாட்டு வாரியம், நிலம் கையகப்படுத்தி வீட்டு மனைகளாக பிரித்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்கிறது. வீட்டு மனைகள் ஒதுக்கியதில் ஊழல் நடந்ததாக பாஜ எம்எல்சி விஸ்வநாத் குற்றம் சாட்டினார். இதையடுத்து, நகர மேம்பாட்டு வாரிய கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஊழல் பற்றி விசாரிக்க 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அரசு குழு அமைத்தது. மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் 4000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக பாஜவை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் அசோக் தெரிவித்துள்ளார்.
ஜூலை 03, 2024