/ தினமலர் டிவி
/ பொது
/ போலீசுடன் மல்லுக்கட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் | VCK protest | Nagai collector office
போலீசுடன் மல்லுக்கட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் | VCK protest | Nagai collector office
நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை உள்ளே போக விடாமல் போலீசார் தடுத்ததால் இரு தரப்புக்கும் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து கோஷமிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திடீரென ஆவேசமடைந்து பேரிகார்டுகளை தூக்கி எறிந்து அலுவலக கேட்டை நோக்கி முன்னேறியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
ஆக 23, 2024