4 மணி நேரத்தில் இலங்கை செல்லும் | Nagapattinam to Kangesanthurai | Sri lanka | Ferry Service
நாகை - இலங்கைக்கு மீண்டும் கப்பல்! நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணியர் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புயல், வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த பயணிகள் உள்ளிட்ட காரணங்களினால் சில நாட்களிலேயே கப்பல் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது. நாகை கலெக்டர் ஆகாஷ், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், நாகை எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கப்பலில் தரைத்தளத்தில் சாதா வகுப்பில் 123 சீட்கள், மேல்தளத்தில் சிறப்பு வகுப்பில் 27 சீட்கள் என மொத்தம் 150 சீட்கள் உள்ளன. சாதா வகுப்பிற்கு 5000 ரூபாய், சிறப்பு வகுப்பிற்கு 7500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கப்பலில் கேப்டன் உள்பட 15 ஊழியர்கள் இருப்பார்கள்.