உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாக்பூர் இந்து அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் | Nagpur issue | Aurngazeb tomb row | VHP Bajrang Dal

நாக்பூர் இந்து அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் கலவரம் | Nagpur issue | Aurngazeb tomb row | VHP Bajrang Dal

மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்கக்கோரி நடந்த இந்து அமைப்புகளின் ஆர்ப்பாட்டடத்தில் கலவரம் வெடித்தது. நாக்பூரின் மஹால் ஏரியாவில் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்டம் நடத்திய இந்துக்களும், அந்த ஏரியாவில் வசிக்கும் முஸ்லிம்களும் கடுமையாக மோதினர். பைக், கார், ஜேசிபி என அந்த பகுதியில் நின்ற வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இரு தரப்பினரும் மாறி, மாறி கல் வீசி தாக்கினர். உச்சக்கட்ட பதற்றம் தொற்றியது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீசார் கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை