உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெள்ள மீட்பு பணியில் மந்தம்; முதல்வர் தேனிக்கு போகணும் Nainar Nagendran|bjp mk stalin|theni Flood

வெள்ள மீட்பு பணியில் மந்தம்; முதல்வர் தேனிக்கு போகணும் Nainar Nagendran|bjp mk stalin|theni Flood

திமுக அரசின் அலட்சியத்தால் தேனி மாவட்டம் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுகிறது என்று தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன் கூறியுள்ளார். அவரது அறிக்கை: வரலாறு காணாத தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், அது, ஒரு விதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனித பேரிடர்தான். பரவமழை தொடங்கும் முன்பே கால்வாய்களை தூர்வாரி, நீர்நிலைகளை பராமரித்து இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. முன்கூட்டியை பருவமழையை கணித்து முன்னேற்பாடு செய்து, மக்களை எச்சரித்து இருந்தால், இதுபோன்ற சேதம் ஏற்பட்டு இருக்குமா? முல்லை பெரியாறு அணையில், 4 நாட்களுக்கு முன் வரை வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் மட்டும் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்றிரவு 7,163 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இதுதான் வெள்ளத்துக்கு காரணமோ என்ற சந்தேகம் எழுகிறது. அரசின் அலட்சியத்தால், நள்ளிரவில் மக்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளை பறிகொடுத்தும், வயல்கள் சேதமாகியும், வாழ்வாதாரம் இழந்தும் தவிக்கின்றனர். மீட்பு பணியை துரிதப்படுத்தாமல், அரசு மெத்தனமாக செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தேனி மாவட்டத்துக்கு சென்று வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

அக் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை