/ தினமலர் டிவி
/ பொது
/ திமுகவுக்கு சவுக்கடி நிச்சயம்: நயினார் நாகேந்திரன் கொதிப்பு | Nainar Nagendran | MK Stalin
திமுகவுக்கு சவுக்கடி நிச்சயம்: நயினார் நாகேந்திரன் கொதிப்பு | Nainar Nagendran | MK Stalin
முதல்வர் ஸ்டாலின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லாதது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டிற்கு உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வர் ஸ்டாலின் சித்திரை ஒன்றான இன்று மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல். ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் ஸ்டாலின், நண்பகல் கடந்தும் நமது தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறாமல் புறக்கணித்து வருகிறார். இந்த ஆண்டும் ஆவின் பால் பாக்கெட்களில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடவில்லை.
ஏப் 14, 2025