உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நம்பி ஓட்டு போட்டோம் நல்லதே நடக்கல! மக்கள் வேதனை | Narasinghapuram | Thiruvallur | Stalin camp

நம்பி ஓட்டு போட்டோம் நல்லதே நடக்கல! மக்கள் வேதனை | Narasinghapuram | Thiruvallur | Stalin camp

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நரசிங்கபுரம் கிராமம். இங்குள்ள ஆதி திராவிட மக்களுக்கு 1968, 87, 94, 2008, 2009ல் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டாக்களை கிராம வருவாய் கணக்குகளில் ஏற்றவில்லை. பல முறை மனு அளித்தும் வருவாய் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் இன்று பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் பேரணியாக நடந்து வந்து முகாமில் இருந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். பட்டாக்களை வருவாய் கணக்கில் ஏற்றாததற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினர்.

ஆக 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி