தரவே மாட்டேன்... மோடி முரண்டு பிடிக்கும் ரகசியம் | Narendra Modi | LS deputy speaker | BJP vs Cong
பிரதமர் மோடிக்கு பிடிக்காத பதவி என்றால், அது லோக்சபா துணை சபாநாயகர் பதவிதான். 2019ல் மோடி 2வது முறையாக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதும், துணை சபாநாயகர் பதவி யாருக்குமே வழங்கப்படவில்லை. 2024ல் மீண்டும் மோடி பிரதமரானார்; இப்போதும் துணை சபாநாயகர் பதவி காலியாகவே உள்ளது. சபாநாயகர் பதவி, ஆட்சி நடத்தும் கட்சிக்கு போகும். எனவே துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சியினருக்கு வழங்குவது வழக்கம். ஆனால் மோடியோ, துணை சபாநாயகர் பதவி இருந்தால்தான் பார்லிமென்ட் நடக்குமா? அந்த பதவி காலியாகவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம். அப்படி என்ன இந்த பதவி மேல் மோடிக்கு வெறுப்பு? 2014ல் முதன்முறையாக மோடி பிரதமரான போது, அ.தி.மு.க.,வின் தம்பிதுரை துணை சபாநாயகர் ஆனார். பொதுவாக, துணை சபாநாயகர் பதவியில் இருப்பவர், பார்லிமென்டில் அரசுக்கு எதிராக பேசுவதோ, கேள்வி கேட்பதோ வழக்கம் கிடையாது.