உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை: காட்பாடியில் பரபரப்பு | Narikuravar people protest Katpadi

டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை: காட்பாடியில் பரபரப்பு | Narikuravar people protest Katpadi

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரிகிரி சுல்தான் நகர் பகுதியில் 65 நரிக்குறவ குடும்பங்கள் வசிக்கின்றன. பட்டா வழங்கும்படி அரசுக்கு அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் 65 குடும்பத்துக்கும் தமிழக அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது. அங்கு நரிக்குறவர்கள் வீடு கட்ட முடிவு செய்து கடக்கால் போடும் பணியை துவங்கவிருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் இன்று வந்தனர். உங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா செல்லாது; இது எங்களுக்கு சொந்தமான இடம்... இங்கு வீடெல்லாம் கட்டக்கூடாது என கூறியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ