உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபரேஷன் சிந்தூரில் கடற்படையின் செயல்பாடு அளப்பரியது என ராஜ்நாத் புகழாரம்! |Navy | Rajnath Singh

ஆபரேஷன் சிந்தூரில் கடற்படையின் செயல்பாடு அளப்பரியது என ராஜ்நாத் புகழாரம்! |Navy | Rajnath Singh

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், முக்கிய பங்காற்றிய கடற்படை வீரர்களை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவாவில் சந்தித்தார். பனாஜியில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் வீரர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் அவர்கள் மத்தியில் உரையாற்றினார். ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில், நம் கடற்படையின் பங்கு அளப்பரியது. அரபிக் கடலில் கம்பீரமாக நின்ற நம் போர்க்கப்பல்கள், பாகிஸ்தான், ராணுவத்தை மிரள வைத்தன. அவர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால், பாக் கடற்படை ஒரு அடி கூட முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. நம் விமானப்படை வீரர்கள், பாகிஸ்தானின் விமானப்படை தளங்களையும், பயங்கரவாதிகளின் கூடாரத்தையும் அழித்தனர். நம் கடற்படை பெரிய அளவில் போரில் களம் இறங்கவில்லை. ஆனாலும் அவர்கள் அனைத்திற்கும் தயார் நிலையில் இருந்தனர். நம் கடற்படையின் தயார் நிலையை பார்த்தே பாகிஸ்தான் பீதி அடைந்துவிட்டது.

மே 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ