நீட் மறு தேர்வுக்கு வாய்ப்பில்லை; சுப்ரீம் கோர்ட் | Neet Exam | Neet Result | Supreme Court
நாளை மீண்டும் நீட் ரிசல்ட் இந்த முறை உண்மை தெரியும்! இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ல் நடந்தது. 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர். ரிசல்ட் ஜூன் 4ல் வெளியானது. 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் லீக் , கருணை மதிப்பெண், ஆள் மாறாட்டம் என பல மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மறுதேர்வு நடத்தக்கூடாது என்றும் வழக்குகள் தொடரப்பட்டன. நீட் தொடர்பாக தாக்கலான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க என்டிஏ வழக்கு தொடர்ந்தது. 40க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலாகின. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: வினாத்தாள் கசிவு நாடு முழுதும் அல்லது திட்டமிட்டு கசிய விட்டதாக உறுதியாக தெரிந்தால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும். சிபிஐ விசாரணையில் தெரியவந்த தகவல்கள் எங்களிடம் தரப்பட்டன. இப்போது வெளியிட்டால் அது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மோசடி செய்தவர்கள் தப்பிக்க வழிவகுக்கும். முதல்கட்ட தகவல்களின்படி, ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மற்றும் பீஹாரின் பாட்னாவில் வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரிகிறது. குஜராத்தின் கோத்ராவில் விடைத்தாளில் மோசடி நடந்துள்ளது.