நெல்லை சாதிய சம்பவத்தில் திடுக்கிட வைக்கும் முழு பின்னணி |nellai kavin case |ktc nagar crime case
நெல்லையில் சாப்ட்வேட் இன்ஜினீயர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின் குமார் வயது 26. சென்னை ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். தாத்தாவுக்கு உடல்நலம் சரி இல்லை. வைத்தியம் பார்ப்பதற்காக அவரை நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள சித்த மருத்துவமனைக்கு நேற்று கவின் அழைத்து சென்றார். மருத்துவமனையில் 2 பேரும் காத்திருந்தனர். அங்கு வந்த இளைஞர் கவினிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவரை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு கேடிசி நகர் முதலாவது தெருவுக்கு சென்றார். அங்கு பைக்கை நிறுத்தி விட்டு கவினுடன் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவினை அந்த இளைஞர் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கவின் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த கொடூர கொலை பட்டப்பகலில் நடந்தது. சம்பவ இடத்தை சுற்றிலும் நிறைய வீடுகள் இருக்கின்றன.