/ தினமலர் டிவி
/ பொது
/ சூறையாடப்பட்ட பள்ளி: நெல்லையில் நள்ளிரவில் பதற்றம் | Nellai Private school | Petrol bomb
சூறையாடப்பட்ட பள்ளி: நெல்லையில் நள்ளிரவில் பதற்றம் | Nellai Private school | Petrol bomb
நெல்லை வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் மாணவன் கடந்த 7ம் தேதி பள்ளிக்கு வரும்போது பூச்சிக்கொல்லி மருந்து குடித்துவிட்டு வந்துள்ளார். பள்ளி வளாகத்திலேயே மயக்கமடைந்த நிலையில், ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் வீரவநல்லூரில் சாலை மாறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர்.
ஜூலை 18, 2025