அரசு பள்ளி மாணவிகள் கேட்ட கோரிக்கை | NEP 2020 | Government School
மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. சிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க முடியும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால், அது தேசிய கல்வி கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்று கூறி அதில் இணைய தமிழக அரசு மறுத்து வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம் என கூறியுள்ளார். திமுகவின் இந்த முடிவுக்கு அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தாலும், ஏராளமானோர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வாய்ப்பு வழங்கலாம் என தெரிவித்து வருகின்றனர். மூன்றாவது மொழியாக மாணவர்கள் விருப்பப்பட்ட மொழியை தேர்வு செய்யலாம் என்கிற நிலையில், அதனை இந்தி திணிப்பு என்று சொல்லி தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த தெளிச்சாத்தநல்லூர் நடுநிலை பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ வெளியாகி இருக்கிறது.