உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்புக்கு இஸ்ரேல் கொடுத்த பரிசு பின்னணி Netanyahu gifts Trump golden pager | Israel pager attack

டிரம்புக்கு இஸ்ரேல் கொடுத்த பரிசு பின்னணி Netanyahu gifts Trump golden pager | Israel pager attack

போரில் ஹெஸ்புலா, ஹமாசை பொளந்து கட்டிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, முதல் ஆளாக வெள்ளை மாளிகைக்கு அழைத்திருந்தார் டிரம்ப். மத்திய கிழக்கு விவகாரங்களை அலசி ஆராய்ந்த பிறகு, டிரம்புக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை நெதன்யாகு கொடுத்தார். துண்டாக அறுத்த மரக்கட்டையில், தங்க பேஜர் தொங்குவது போல் அந்த பரிசு இருந்தது. இஸ்ரேலின் சிறந்த நண்பர், சிறந்த கூட்டாளி என்று டிரம்பை குறிப்பிட்டு எழுதி இருந்தனர். உலகில் எப்போதோ வழக்கொழிந்த பேஜரை ஏன் தங்கத்தில் செய்து கொடுத்தார்? என்ற கேள்வி வரலாம். அதற்கும் ஒரு கதை உண்டு. காசாவில் இருந்து குடைச்சல் கொடுத்த ஹமாசுக்கு ஆதரவாக, லெபனானில் இருந்து களமிறங்கி இஸ்ரேலை அடித்தது ஹெஸ்புலா. காசா போரில் பிஸியாக இருந்த இஸ்ரேல், திடீரென செப்டம்பர் மாதம் பேஜர், வாக்கி டாக்கி அட்டாக்கை நடத்தி ஹெஸ்புலாவை அலறவிட்டது. இது தான் ஹெஸ்புலா போர் வெடிக்க காரணம்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை