உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொறியியல் அதிசயமாக மாறப்போகும் பாம்பன் பாலம் | New Pamban Bridge | Modi Pamban Bridge

பொறியியல் அதிசயமாக மாறப்போகும் பாம்பன் பாலம் | New Pamban Bridge | Modi Pamban Bridge

பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நூறு சதவீதம் முடிந்துள்ளது. பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தை இரண்டு கட்டமாக திறந்து மூடி சோதனை செய்து பார்க்கப்பட்டது. சரக்கு ரயில் பெட்டியுடன் இரண்டு கட்டங்களாக ரயில் சோதனை ஓட்டமும் நடந்தது. அடுத்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்று வழங்கிய பின் பாலம் திறப்பு விழா நடக்க உள்ளது. நவம்பர் 15க்குள் திறப்பு விழா நடத்தப்படும் எனவும், பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் புதிய பாம்பன் ரயில் பாலத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். பாம்பனில் புதிய ரயில் பாலத்தை இரண்டு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டது. கோவிட் பரவல் காரணமாக பாலம் கட்டும் பணிகள் தாமதமானது. 2022 டிசம்பரில் பழைய பாம்பன் ரயில் பாலம் உறுதி தன்மையை இழந்தது. இதனால் ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு புதிய ரயில் பால பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இப்போது புதிய ரயில் பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பாலம் திறக்கப்படுவதுக்கான அதிகாரபூர்மாக தேதி அறிவிக்கப்படும் என ஆர்.என்.சிங் கூறினார்.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி