BNS சட்டத்தில் முதல் வழக்கு: அமித்ஷா சொன்ன விவரம்
ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட IPC, CrPC, IEA குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்தன. நாடு முழுவதும் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், BNS எனப்படும் பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தில் முதல் வழக்கு பதியப்பட்டது. டெல்லி ரயில் நிலையம் அருகே நடைபாதை ஆக்ரமித்த வியாபாரி மீது பதியப்பட்ட வழக்குதான் முதல் வழக்கு என்று கூறப்பட்ட நிலையில், அது பொய் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்தார்.
ஜூலை 01, 2024