கிருஷ்ணா நீரை வழங்க தமிழகத்திற்கு ஆந்திரா செக்
1983ல் தமிழகம் - ஆந்திரா இடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி, சென்னை குடிநீர் தேவைக்கு ஆண்டுதோறும் 12TMC கிருஷ்ணா நீரை ஆந்திரா அரசு வழங்க வேண்டும். 2 தவணைகளில் கிருஷ்ணா நீரை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஜூலை டு அக்டோபர் காலத்தில் 8 TMCயும், ஜனவரி டு ஏப்ரல் காலத்தில் 4 TMC தண்ணீரும் தர வேண்டும். ஆனால், ஆந்திரா முறைப்படி கிருஷ்ணா நீரை வழங்குவது இல்லை. கிருஷ்ணா கால்வாய் பராமரிப்புக்கான நிதியை ஆந்திராவுடன் தமிழக அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் 1,261 கோடி ரூபாய் பங்கில், இதுவரை 1132 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 129 கோடியையும் வழங்கினால் தான், ஜூலை-அக்டோபர் காலத்துக்கான கிருஷ்ணா நீர் தமிழகத்துக்கு தருவோம் என ஆந்திரா அதிகாரிகள் கறாராக கூறியுள்ளனர். இப்பிரச்னையை தமிழக நீர்வள அதிகாரிகள் நிதித்துறை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.