உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிதி நெருக்கடியில் திணறும் ஊராட்சி நிர்வாகம் | Panchayat administration stutters |Lok sabha election

நிதி நெருக்கடியில் திணறும் ஊராட்சி நிர்வாகம் | Panchayat administration stutters |Lok sabha election

18வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ல் தொடங்கி ஜன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ல் ஓட்டுப்பதிவு நடந்தது. அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகள் ஓட்டு சாவடிகளாக பயன்படுத்தப்பட்டன. அங்கு வாக்காளர்கள் வசதிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்ய மாநில தேர்தல் கமிஷன் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியது. அவர்கள், ஊராட்சி அளவில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், ஊராட்சி பொது நிதியில் இதை செய்து கொள்ளவும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினர். ஓட்டு சாவடிகளில், ஷாமியானா பந்தல் அமைத்தது, உதவி மையம், குடிநீர், கழிப்பிடம், மின் இணைப்பு, விளக்குகள் உட்பட குறைந்தபட்ச வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக ஊராட்சி அமைப்புகள் செலவு செய்தன. தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைத்தும் ஊராட்சி அமைப்புகளுக்கு செலவிட்ட தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை