நகைகளை விற்று தருவதாக வாங்கி ஏமாற்றிய கதை
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 18 வது வார்டு திமுக கவுன்சிலர் பீரம்மாள். இவரது மகன் முகமது இப்ராஹிம். பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். பிற கடைகளில் இருந்து நகைகளை வாங்கி வந்து விற்று வருகிறார். செய்யது அலி என்பவரின் கடையில் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை விற்றுத்தருவதாக இப்ராஹிம் வாங்கி சென்றார். பல மாதங்கள் ஆகியும் நகைகளையோ, அதற்கான பணத்தையோ திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். இதனால், கடையநல்லூர் போலீசில் செய்யது அலி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 06, 2024