/ தினமலர் டிவி
/ பொது
/ மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பிரசாரம் | Vikravandi By-Election | Vikravandi | election campaign
மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பிரசாரம் | Vikravandi By-Election | Vikravandi | election campaign
விக்கிரவாண்டியில் ஜூலை 10ல் இடைத்தேர்தல் நடக்கிறது. 276 ஓட்டுச்சாவடிகளில் 2.34 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்ததால் திமுக, பாமக, நாம் தமிழர் என மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளர் சிவா, பாமக வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் டாக்டர் அபிநயா, சுயேச்சைகள் உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர். திமுக தரப்பில் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, நேரு, பன்னீர்செல்வம் உட்பட 15 அமைச்சர்கள், 30 எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் ஆளுக்கு ஐந்து கிராமங்களை பிரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஜூலை 08, 2024