நடக்கும் சம்பவங்களுக்கு குரோதி ஆண்டும் காரணம்; எச்சரிக்கும் ஜோதிடர்கள்
எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு தெரு நாய்கள் மட்டுமின்றி வளர்ப்பு நாய்களும் மனிதர்களை கடித்து குதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல சாலையில் செல்வோரை மாடுகள் தாக்குவதும் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திடீரென இவை போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு நடக்கும் குரோதி ஆண்டும் ஒரு காரணம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த குரோதி ஆண்டு ஏப்ரல் 2024 முதல் 2025 வரை நீடிக்கிறது. குரோதி என்றால் கோரமான, பகை, கேடு என்று பொருள். ஆற்காடு பஞ்சாங்கத்தில் குரோதி ஆண்டில் விழுப்புரம், மதுரை, கோவில்பட்டி, நெல்லை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மற்றும் வட மாநிலங்களில் பெரிய அளவு நில நடுக்கம் ஏற்படலாம். சாலை விபத்துகள் அதிகரிக்கும். நாய் முதல் தேனீ வரையிலான ஜந்துக்களால் தொந்தரவு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.