உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / களமிறங்கியது மெடிக்கல் டீம் முகாம் அமைத்து சோதனை | Kallakurichi | Viral Fever

களமிறங்கியது மெடிக்கல் டீம் முகாம் அமைத்து சோதனை | Kallakurichi | Viral Fever

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் அருகே உள்ளது வடதொரசலூர் கிராமம். இங்குள்ள மூப்பனார் கோவில் தெருவில் வசிக்கும் திவ்யா, குபேரன், கலைவாணன், இனியா மற்றும் சிறுமி உட்பட 7 பேருக்கு நேற்று வாந்தி, மயக்கத்துடன் காய்ச்சல் வாட்டியது. தியாகதுருகம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். உடல் நிலை தொடர்ந்து மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். ரத்த பரிசோதனை செய்ததில் 7 பேருக்கும் எலி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி