உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / EPS மவுனத்தால் அதிமுகவில் வெடிக்கப்போகும் பஞ்சாயத்து | EPS vs OPS | ADMK | Palanisamy | ADMK Crisis

EPS மவுனத்தால் அதிமுகவில் வெடிக்கப்போகும் பஞ்சாயத்து | EPS vs OPS | ADMK | Palanisamy | ADMK Crisis

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோற்றது. முன்னதாக சட்டசபை, உள்ளாட்சி உள்ளிட்ட பல தேர்தல்களிலும் அதிமுக தொடர்ச்சியாக தோற்றது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டது. அதிமுக இவ்வளவு பலவீனப்பட கட்சி பிளவுபட்டதே காரணம் என தொண்டர்கள் குமுற துவங்கி உள்ளனர். கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்; அப்போது தான் 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வர முடியும் என்றும் பேசி வருகின்றனர்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை