/ தினமலர் டிவி
/ பொது
/ விக்கிரவாண்டி யாருக்கு? விறுவிறுப்பாக நடக்கும் ஓட்டுப்பதிவு | vikravandi bypoll | DMK vs PMK vs NTK
விக்கிரவாண்டி யாருக்கு? விறுவிறுப்பாக நடக்கும் ஓட்டுப்பதிவு | vikravandi bypoll | DMK vs PMK vs NTK
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ நா.புகழேந்தி மறைவால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா களம் இறங்கினர். சுயேச்சைகளுடன் சேர்த்து மொத்தம் 29 வேட்பாளர்கள். அதிமுக போட்டியிடவில்லை. பரபரப்பான சூழலில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. முன்னதாக ஒரு மணி நேரம் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 276 ஓட்டுச்சாவடிகளில் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஓட்டு போடுகின்றனர். பதற்றமான 44 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 10, 2024