பொய் பிரசாரம் செய்துதான் காங்கிரஸ் ஜெயித்தது Kishan Reddi | Central Minister
பொய் பிரசாரம் செய்துதான் காங்கிரஸ் ஜெயித்தது Kishan Reddi | Central Minister | Puducherry BJP| Executive meeting | புதுச்சேரியில் பாஜ மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சிறப்புரையாற்றினார். புதுச்சேரியில் பொய் பிரசாரம் மூலம் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் பாஜ தீவிரமாக பணியாற்றியது. அதற்குரிய அங்கீகாரத்தை மக்கள் அளித்துள்ளனர். மேற்கு வங்கம், ஒடிசா, குஜராத், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. வடகிழக்கு மாநிலங்களில் அதுவும் இல்லை. காங்கிரஸ் பிரிவினைகளை பேசி, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி தேர்தல் களத்தை சந்தித்தது. இடஒதுக்கீட்டை நீக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தை தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களிடம் பரப்பியது. அப்படி இருந்தும் 99 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது. சனாதனத்தை ஒழிப்போம் என காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக பல ஆண்டுகளாக பேசி வருகிறது. திமுக எவ்வளவுதான் முயன்றாலும் சனாதனத்தை இந்த மண்ணில் இருந்து வேரறுக்க முடியாது. புதுச்சேரி சனாதன தர்மம் உள்ள இடம். சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வதன் மூலம் காங்கிரஸ் - திமுகவுக்கு பாடம் புகட்டுவோம் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.