பயங்கரவாதத்துக்கு இங்கு இடமில்லை: நித்யானந்த் ராய் Three terrorist killed by Indian Army
பயங்கரவாதத்துக்கு இங்கு இடமில்லை: நித்யானந்த் ராய் Three terrorist killed by Indian Army| Anti Infiltration Operation success| Indian Army| Jammu - Kashmir Terrorist ஜம்மு - காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நடந்து வருவதால், வழக்கத்தை விட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாத்ரிகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் இரவு பகலாக பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், குப்வாரா மாவட்டம் கெரன் பகுதியில், எல்லை கட்டுப்பாடு கோட்டை கடந்து, நம் நாட்டு எல்லைக்குள் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். அதை அறிந்த நம் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் ராணுவத்தினரை நோக்கி சுட்டனர். இரு தரப்பிலும் சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்தும் ஆயுதங்கள் கிடைத்தன. இது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். பிரதமர் மோடியின் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இடமே கிடையாது. பயங்கரவாதத்தை சகித்து கொள்ளும் தன்மை இந்தியாவுக்கு இப்போது இல்லை. இங்கு பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் அல்லது மண்ணில் 7 அடிக்கு கீழ் புதைக்கப்படுவார்கள் என்றார்.