/ தினமலர் டிவி
/ பொது
/ காத்மாண்டுவில் நாளை பதவியேற்பு நேபாளத்தை உற்று நோக்கும் நாடுகள் KP Oli | new pm of Nepal
காத்மாண்டுவில் நாளை பதவியேற்பு நேபாளத்தை உற்று நோக்கும் நாடுகள் KP Oli | new pm of Nepal
நேபாளத்தில் 2022ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் சென்டர் கட்சியும், நேபாள கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்தன. மாவேயிஸ்ட் சென்டர் கட்சியின் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா பிரதமர் ஆனார். அதன் பின் இவர் 3 முறை நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்க நேர்ந்தது. எனினும், 3 முறையும் இவரது ஆட்சி தப்பியது. மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி. ஷர்மா ஒலிக்கும், பிரசண்டாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
ஜூலை 14, 2024