உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிபிசிஐடி போலீசிடம் ஹைட் அண்ட் சீக் | Ex Minister Vijayabaskar | Bail plea

சிபிசிஐடி போலீசிடம் ஹைட் அண்ட் சீக் | Ex Minister Vijayabaskar | Bail plea

சிபிசிஐடி போலீசிடம் ஹைட் அண்ட் சீக் | Ex Minister Vijayabaskar | Bail plea | High court madurai branch | 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது கரூர் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு ஜூன் 25-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 2ம் தேதி மீண்டும் ஒரு முன்ஜாமீன் மனுவை கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார். தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க வேண்டி இருப்பதால் சிபிசிஐடி போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். மனு மீதான விசாரணையின்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சண்முகசுந்தரம், முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். 2 முன் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் எங்கே ஓடி ஒளிந்தாலும் விஜயபாஸ்கரை விடமாட்டோம் என சட்ட அமைச்சர் ரகுபதி சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் இருவரும் முன் ஜாமின் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையை நாடி உள்ளனர். இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கில் தங்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக அந்த மனுவில் கூறி உள்ளனர். விஜயபாஸ்கரின் புதிய முன் ஜாமின் மனு, ஐகோர்ட் மதுரை கிளையில் நாளை விசாரணைக்கு வருகிறது.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ