உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி முதல்வர் உடல் நிலை பற்றி திகார் சிறை சொல்வது என்ன? Arvind Kejriwal Health report

டில்லி முதல்வர் உடல் நிலை பற்றி திகார் சிறை சொல்வது என்ன? Arvind Kejriwal Health report

டில்லி முதல்வர் உடல் நிலை பற்றி திகார் சிறை சொல்வது என்ன? Arvind Kejriwal Health report| Tihar Jail Report| AAP| டில்லி அரசின் மதுக் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக 20 நாள் ஜாமினில் வந்த அவர், தேர்தல் முடிந்ததும் மீண்டும் சிறை சென்றார். மீண்டும் ஜாமின் பெற கெஜ்ரிவால் முயன்றும் கிடைக்கவில்லை. சர்க்கரை நோயாளியான கெஜ்ரிவாலின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், உடல் எடை சரிவு, லோ சுகர் என பல பிரச்னைகளுக்கு ஆளாவதாக, ஆம் ஆத்மி தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவாலின் உடல் நிலையில் திகார் சிறை நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை என, டில்லி அமைச்சர் அதிஷி மற்றும் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் குற்றம் சாட்டினர். அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் இறுதியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது உடல் எடை 70 கிலோவாக இருந்தது. தற்போது கிட்டத்தட்ட 10 கிலோ எடை குறைந்து விட்டார். சிறையில் 5 முறை அவரது ரத்த சர்க்கரை அளவு 50க்கு குறைவாக பதிவானது. அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அவர் கோமா நிலைக்கு போகவும் வாய்ப்புள்ளதாக ஆம் ஆத்மி நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர். ஆம் ஆத்மி தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு திகார் சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. கெஜ்ரிவால் உடல் நலம் குறித்த மருத்துவ அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. கெஜ்ரிவாலின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்கிறார்கள். எய்ம்ஸ் டாக்டர்கள் அறிவுரைப்படி அவருக்கான உணவு வழங்கப்படுகிறது. அதுவும் வீட்டில் இருந்து சமைக்கப்பட்ட உணவுகளே வழங்கப்படுகிறது. ஜூலை 2ம் தேதி கெஜ்ரிவாலின் உடல் எடை 63.5 கிலோ இருந்த நிலையில், 14ம் தேதி 61.5 கிலோவாக உள்ளது. அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கை அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது என திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது. கெஜ்ரிவாலின் உடல் நிலை குறித்து வேண்டுமென்றே தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை