தமிழகம் முழுவதும் வெறியாட்டம் ஆடும் கும்பல் EPS | palanisamy | mk stalin | tncm
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தராமல், தமது நிர்வாக திறமையின்மையை தினமும் வெளிகாட்டி வருகிறார். தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதாக ஸ்டாலின் வக்கணை பேசுகிறார். ஆனால், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடாமல் வைத்திருப்பது, தினமும் நடக்கும் கொலை சம்பவங்கள் மூலம் நிரூபணமாகிறது. யார் ஆட்சியில் இருந்தாலும் ஒரு சில கொலை சம்பவங்கள் நடப்பது இயல்புதான். திமுக ஆட்சியில் கொலை செய்வதையே தொழிலாக கொண்டவர்கள் மாநிலம் முழுவதும் வெறியாட்டம் ஆடுவதும், அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதும் கண்கூடு. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்களில் ஒருவரை என்கவுன்டர் செய்தது விந்தை. காங்கிரசின் நெல்லை ஜெயக்குமார், அதிமுகவின் சேலம் சண்முகம், நாம் தமிழர் கட்சியின் மதுரை பாலசுப்ரமணியன் என கட்சி பேதமின்றி கொலைகள் அரங்கேறி வருகின்றன. ஒரு சில சம்பவங்களை தவிர பிற குற்றங்களில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.