/ தினமலர் டிவி
/ பொது
/ கலவரத்தில் 115 பேர் உயிர் போனது 4000 இந்திய மாணவர் நிலை என்ன? Bangladesh | Police - Students Riots
கலவரத்தில் 115 பேர் உயிர் போனது 4000 இந்திய மாணவர் நிலை என்ன? Bangladesh | Police - Students Riots
வங்கதேச விடுதலை போரில் ஈடுபட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 2018ல் நடந்த படைவீரர்கள் தேர்விலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு எதிர்ப்புகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இடஒதுக்கீடு ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இட ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்தது செல்லாது என்றும், மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கவும் ஜூன் 5ல் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவதாக அரசு அறிவித்ததால், மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2 வாரமாக நாட்டின் தலைநகர் டாக்கா உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜூலை 20, 2024