ICUவில் செந்தில் பாலாஜி-அடுத்தடுத்து மாறிய ஆஸ்பிட்டல் | senthil balaji health | ED | Senthil Balaji
திமுகவின் முன்னணி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்த போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பரிசோதனையில் ரத்த குழாய்களில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. மீண்டும் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆகின. உடல் நிலையை காரணம் காட்டி கேட்ட ஜாமீன் மனுக்களும் பலன் தரவில்லை. தொடர்ந்து சிறை வாசம் அனுபவிக்கும் செந்தில் பாலாஜியை அவ்வப்போது சிறையில் உள்ள மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து வந்தனர்.