உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இடஒதுக்கீடு முறையை புரட்டிப்போட்ட தீர்ப்பு என்ன? bangladesh job quota

இடஒதுக்கீடு முறையை புரட்டிப்போட்ட தீர்ப்பு என்ன? bangladesh job quota

இடஒதுக்கீடு முறையை புரட்டிப்போட்ட தீர்ப்பு என்ன? bangladesh job quota| Top Court Scales Back| bangladesh violence 1971 வங்கதேச போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, அந்நாட்டு அரசு பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், 2018ல் பூதாகரமானது. மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இடஒதுக்கீட்டை அரசு ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த வங்கதேச ஐகோர்ட், இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க உத்தரவிட்டது. அரசும் அதை மீண்டும் நடைமுறைப்படுத்த முயன்றது. இதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீஸ் - மாணவர்கள் இடையே மோதல் உண்டானது. பல இடங்களில் வன்முறை வெடித்து. இதில் இதுவரை 150க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த வங்கதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்ட ராணுவத்தினர் இறக்கப்பட்டுள்ளனர். இன்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இச்சூழலில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த வங்கதேச சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே ஐகோர்ட் வழங்கிய 30 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை ரத்து செய்தது. எனினும், வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக நீக்க மறுத்தது. விடுதலை போரில் பங்கேற்றவர்கள் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை 30ல் இருந்து 5 சதவீதமாக கோர்ட் குறைத்தது. பழங்குடியினருக்கு 1 சதவீதம், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு 1 சதவீதம் என இட ஒதுக்கீடுக்கு மொத்தம் 7 சதவீதம் தரப்படும். எஞ்சிய 93 சதவீத இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு முன்பு 56 சதவீதமாக இருந்த மொத்த இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் 7 சதவீதமாக குறைத்துவிட்டது. இதனால், தகுதி அடிப்படையிலான ஒதுக்கீடு 44ல் இருந்து 93 சதவீதமாக அதிகரித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்ப கோர்ட் அறிவுறுத்தியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை போராட்ட குழுவினர் வரவேற்று உள்ளனர். இந்த ஒதுக்கீட்டை அரசு அறிவிக்கும் பட்சத்தில், வங்கதேசத்தில் விரைவில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை