கோர்ட்டில் நாளை ஆஜராக வேண்டிய நேரத்தில் அட்மிட்
செந்தில் பாலாஜி 2014ல் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் முறைகேடாக பணி நியமனம் செய்ததாக வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்தாண்டு ஜூனில் கைது செய்தது. ஜாமின் பெற ஓராண்டாக முயற்சித்தும், அமலாக்கத்துறை எதிர்ப்பால் கிடைக்கவில்லை. அமலாக்கத்துறை வழக்கில் இருந்த விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் செந்தில் முறையிட்டார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 22ம் தேதி அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்தார். கோர்ட்டில் செந்தில் நாளை ஆஜராக வேண்டிய சமயத்தில் அவருக்கு திடீரென சிறையில் இன்று நெஞ்சுவலி ஏற்பட்டது. தற்போது, சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார்.