உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் மீதான தாக்குதலால் அதிகரித்த நெருக்கடி Donald Trump

டிரம்ப் மீதான தாக்குதலால் அதிகரித்த நெருக்கடி Donald Trump

டிரம்ப் மீதான தாக்குதலால் அதிகரித்த நெருக்கடி Donald Trump | former president | America | New president Election 2024 | அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ல் நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த 13ம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசாரம் செய்தார். மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவரை 20 வயது நபர் துப்பாக்கியால் சுட்டான். இதில் அதிர்ஷ்டவசமாக ட்ரம்ப் காதில் காயங்களுடன் உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்ட இளைஞன், பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டு கொல்லப்பட்டான். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அமெரிக்க உளவு பிரிவான யுனைடெட் ஸ்டேட்ஸ் சீக்ரட்ஸ் சர்வீசின் கவனக்குறைவும் காரணம் என புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அந்த பிரிவின் தலைவராக செயல்பட்ட கிம்பர்லி சீட்டல் பதவி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி