பார்லியை பரபரக்க வைத்த பாஜ அமைச்சர் நித்யானந்த் | bjp govt action against terrorism
பார்லியை பரபரக்க வைத்த பாஜ அமைச்சர் நித்யானந்த் | bjp govt action against terrorism | kashmir attack காஷ்மீரில் கடந்த 2 மாதங்களாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீர் தாக்குதல் குறித்து ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கேள்வி எழுப்பினார். இதற்கு உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். பயங்கரவாதிகளின் திட்டம் ஒரு போதும் வெல்லாது. கடந்த சில நாட்களில் மட்டும் 28 பயங்கரவாதிகளை என்கவுன்டர் செய்துள்ளோம். சில வீரர்களையும் நாம் இழந்துள்ளோம். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய 2019ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை 900 பயங்கரவாதிகளை என்கவுன்டரில் கொன்று விட்டோம். ஒன்று பயங்கரவாதிகள் ஜெயிலுக்கு போவார்கள். இல்லை என்றால் நரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இது தான் மோடி கவர்மென்ட். ஜீரோ அளவில் கூட பயங்கரவாதத்தை அனுமதிக்கமாட்டோம் என்று நித்யானந்த் ராய் சொன்னார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களையும் அடுத்த 10 ஆண்டில் நடந்த தாக்குதல்களையும் அமைச்சர் ஒப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 7,217 பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஆனால் பாஜ ஆட்சியில் இது 2,259 ஆக குறைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் மக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம் 2,829 பேரை பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். இந்த எண்ணிக்கை பாஜ ஆட்சியில் 67 சதவீதம் குறைந்து விட்டது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வது ஆரோக்கியமானது அல்ல என்றும் நித்யானந்த் ராய் சொன்னார்.