இலவச புடவை வந்தது எப்படி? கோயில் நிர்வாகம் விளக்கம்
இலவச புடவை வந்தது எப்படி? கோயில் நிர்வாகம் விளக்கம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில், கடந்த பவுர்ணமி தினத்தில் அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் உள்ள பெண் காவல் தெய்வத்திற்கு பிங்க் நிறத்தில் புது புடவை சாத்தப்பட்டு இருந்தது. ஆனால் அது, ரேஷனில் வழங்கப்படும் இலவச புடவை. அதிலிருந்த முத்திரையுடன் சமூக வலைதளத்தில் போட்டோ பரவியது. இதையடுத்து அந்த புடவையை கோயில் நிர்வாகம் மாற்றியது. இலவச புடவை சாமிக்கு எப்படி சாத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு கோயில் இணை ஆணையர் ஜோதி பதிலளித்தார். சுவாமி வீதி உலாவின்போது பக்தர்கள் நூற்றுக்கணக்கான புடவை, வேஷ்டிகளை சாமிக்கு வழங்கினர். அதில் யாரோ ஒருவர்தான் அரசின் இலவச புடவையை கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
ஜூலை 24, 2024