மாநில அரசு நிலம் தராமல் திட்டம் எப்படி நிறைவேறும் Ashwini vaishnav| Railway minister| railways
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். 1,302 கி.மீ., தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.33,467 கோடி செலவில் 2,587 தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் நடக்கின்றன. 10 ஆண்டுகளில் 687 பாலங்கள், ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 1,302 தொலைவிற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.879 கோடி மட்டுமே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதிதாக ஒதுக்கப்பட்டது. தற்போது அது 7 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகபடுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது.