ஆம்ஸ்ட்ராங் சம்பவ மர்மம் முழுதும் உடைந்தது-அதிரவச்ச ட்விஸ்ட் | Armstrong case | Hariharan confession
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை மொத்த தமிழகத்தை உலுக்கியது. பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்தது என்று கூறப்பட்டு வந்த நிலையில் இதுவரை யாரும் எதிர்பாராத மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த சில மணி நேரங்களில் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, மைத்துனர் அருள் உட்பட 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கியதாக வாக்குமூலம் அளித்தனர். சிசிடிவி கேமராவிலும் இவர்கள் ஸ்பாட்டுக்கு வந்து ஆம்ஸ்ட்ராங்கை வெட்டும் காட்சி இருந்தது. எனவே போலீசாரும் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு தம்பியும், மைத்துனரும் எடுத்த ரிவேஞ்ச் என்று தான் நம்பினர். ஆனால் அடுத்தடுத்த விசாரணையில் பெண் தாதாக்கள் அஞ்சலை, மலர்கொடி உள்ளிட்டோர் சிக்கினர். தலைமறைவு டான் சம்போ சந்திலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.