சட்டம் ஒழுங்கு சீர்குலைவு திமுக அரசு பதவி விலகணும் Anbumani| PMK| Mk stalin| dmk| Tn Govt
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு திமுக அரசு பதவி விலகணும் Anbumani| PMK| Mk stalin| dmk| Tn Govt பாமக தலைவர் அன்புமணியின் அறிக்கை: தமிழகத்தில் ஒரே நாளில் 3 கொடிய அரசியல் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அதிமுக வட்ட செயலாளர் பத்மநாதன், சிவகங்கையில் பாஜ கூட்டுறவு அணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், கன்னியாகுமரி திருவட்டார் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் உஷாராணி கணவர் ஜாக்சன் ஆகியோர் வெட்டி கொல்லப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. முன்விரோதம் காரணமாக இக்கொலைகள் நடந்ததாக போலீசார் தட்டிக்கழிக்க கூடாது. முன்விரோதம் இருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றுதான் பொருள். அச்சுறுத்தலை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். போலீசார் அதை செய்ய தவறிவிட்டனர். இது தவிர போதை கலாச்சாரமும், அதனால் நிகழும் குற்றங்களும் தலைவிரித்து ஆடுகின்றன. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதுதான் அரசின் தலையாய கடமை. ஆனால், குற்றவாளிகள் எந்த அச்சமும் இல்லாமல் நடமாடுகிறார்கள். அதை தடுக்க முடியாமல் போலீசார் திணறுகிறார்கள். 2 மாதங்களாக நடந்த அரசியல் படுகொலைக்களுக்கு பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.