உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜவை பற்றி பேச ராகுலுக்கு உரிமை இல்லை; வானதி | BJP MLA Vanathi | Rahul | Loksaba | PMModi

பாஜவை பற்றி பேச ராகுலுக்கு உரிமை இல்லை; வானதி | BJP MLA Vanathi | Rahul | Loksaba | PMModi

பாஜவை பற்றி பேச ராகுலுக்கு உரிமை இல்லை; வானதி | BJP MLA Vanathi | Rahul | Loksaba | PMModi பாஜ எம்எல்ஏ வானதியின் அறிக்கை; லோக்சபாவில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, முதலாளிகளுக்கான பட்ஜெட் என எப்போதும் பேசுவதையே பேசியுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாமல் போய் விட்டதே. 55 ஆண்டுகளாக ஆண்ட ஐந்து தலைமுறை குடும்பத்தை ஆட்சிக்கு வர முடியாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏழை குடும்பத்தில் பிறந்த மோடி தடுத்து விட்டாரே என்ற ஆதங்கம்தான் வெளிப்படுகிறது. நான் யார் தெரியுமா, என் பரம்பரை தெரியுமா என்ற ஆதிக்க மனப்பான்மையில்தான் ராகுல் பேசி வருகிறார். எந்த பின்னணியும் இல்லாமல் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. பாஜவில் ஒருவர் மட்டுமே பிரதமராக முடியும். மற்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை என ராகுல் பேசியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியை கட்டுக்குள் வைத்திருக்கும் குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல், இதை பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரோ அல்லது அவர்களால் நியமிக்கப்படும் ஒருவரோதான் வர முடியும். இப்போதும் கூட ராகுல் எதிர்க்கட்சி தலைவர். அவரது தாயார் சோனியா பார்லி காங்கிரஸ் குழு தலைவர். ராஜ்யசபா உறுப்பினர். ராகுலின் சகோதரி பிரியங்கா, ராகுல் ராஜினாமா செய்த வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தால் அம்மா, மகன், மகள் தான் பிரதானமாக இருக்கின்றனர். இப்படி கட்சியையே ஒரு குடும்பம் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் பாஜவில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். பிரதமாக வரலாம். 1996, 1998, 1999ல் பாஜவுக்கு வாய்ப்பு கிடைத்தபோது வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவருக்கு பிறகு சாதாரண எளிய குடும்பத்தை சேர்ந்த மோடி பிரதமராகி இருக்கிறார். அவர் மன்மோகன் போல ஒரு குடும்பத்தால் நியமிக்கப்பட்டவர் அல்ல. மக்கள் ஆதரவுடன் தனது திறமையால் பிரதமரானவர். 2014, 2019, 2024 என மூன்று தேர்தல்களிலும் அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திதான் வென்றிருக்கிறோம். மோடி பிரதமராக தான் மக்கள் ஓட்டளித்துள்ளனர். ஜனாயகத்திற்கு எதிரான வாரிசு, குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுலுக்கு பாஜவை பற்றி பேச எந்த உரிமையும் இல்லை எனவும் வானதி கூறியுள்ளார்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி