உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹமாஸ் தலைவரை தீர்த்துக்கட்டியது இஸ்ரேல்-பரபரப்பு | Who is Ismail Haniyeh | Israel-Hamas war | Iran

ஹமாஸ் தலைவரை தீர்த்துக்கட்டியது இஸ்ரேல்-பரபரப்பு | Who is Ismail Haniyeh | Israel-Hamas war | Iran

ஹமாஸ் தலைவரை தீர்த்துக்கட்டியது இஸ்ரேல்-பரபரப்பு | Who is Ismail Haniyeh | Israel-Hamas war | Iran கடந்த அக்டோபரில் இருந்து இஸ்ரேல், ஹமாஸ் போர் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது முக்கிய திருப்பமாக, ஹமாசின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் தீர்த்துக்கட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவி ஏற்பு விழாவுக்காக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் சென்றிருந்தார். விழாவில் பங்கேற்று விட்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வீச்சில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அவருடன் அவரது பாதுகாவலரும் மரணம் அடைந்தார். இந்த தகவலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் தான் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த ஈரான் புதிய அதிபர் மசூத் பெசிஸ்கியான் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற பிறகு ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி ஹமேனியை சந்தித்தும் இஸ்மாயில் பேசி இருந்தார். இஸ்மாயில் ஹனியே சாதாரண தலைவர் அல்ல. ஹமாஸ் அமைப்பின் டாப் லீடர். அவருக்கு வயது 62. காசா நகரின் அகதிகள் முகாமில் தான் அவர் பிறந்தார். 1980ல் ஹமாஸ் அமைப்பில் சேர்ந்தார். அசுர வேகத்தில் வளர்ந்தார். ஹமாஸ் நிறுவனரும் மதகுருவுமான ஷேக் அகமது யாசினின் நெருங்கிய கூட்டாளியாக சீக்கிரமே உருவெடுத்தார். இரண்டு முறை அவரை இஸ்ரேல் கைது செய்தது. சில காலம் இஸ்ரேல் நாட்டின் சிறையில் தண்டனை அனுபவித்தார். பாலஸ்தீனில் நடந்த 2006 தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. இஸ்மாயி்ல ஹனியே பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அடுத்த ஆண்டே அவரை பதவியில் இருந்து நீக்கினார் அதிபர் மஹ்மவுத் அப்பாஸ். பத்து ஆண்டுக்கு பிறகு 2017ல் ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவராக இஸ்மாயில் ஹனியே தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டில் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. இஸ்ரேல், ஹமாஸ் போரில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்தது. காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது போர் நிறுத்த பேச்சு வார்த்தையின் முக்கிய நபராகவும் இஸ்மாயில் ஹனியே இருந்தார். ஆனால் அவரது 3 மகன்கள், 4 பேர பிள்ளைகளை இஸ்ரேல் குறி வைத்து கொன்றதாக அப்போதே ஹமாஸ் கூறி இருந்தது. இந்த நிலையில் தான் இஸ்மாயில் ஹனியேவும் தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கிறார்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி