உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடு நிலச்சரிவில் உலுக்கும் தமிழர்கள் மரணம் | wayanad landslide | Mundakkai landslide death toll

வயநாடு நிலச்சரிவில் உலுக்கும் தமிழர்கள் மரணம் | wayanad landslide | Mundakkai landslide death toll

வயநாடு நிலச்சரிவில் உலுக்கும் தமிழர்கள் மரணம் | wayanad landslide | Mundakkai landslide death toll இந்தியாவை உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி முண்டக்கை. அடுத்தது சூரல்மலை. முண்டக்கையில் 2 நிலச்சரிவும், சூரல்மலையில் ஒரு நிலச்சரிவும் பதிவானது. சூரல்மலையில் கிட்டத்தட்ட மீட்பு பணி முடிந்து விட்டது. ஆனால் முண்டக்கையில் இன்னும் துவக்க கட்டத்தில் தான் உள்ளது. சூரல்மலையில் இருந்து முண்டக்கை செல்லும் ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இப்போது தற்காலிக பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. அதன் வழியாக தான் பொக்லைன் உட்பட முக்கிய கருவிகளை எடுத்து சென்று துரித கதியில் மீட்பு பணியை மேற்கொள்ள முடியும். இதற்கிடையே முண்டக்கை பற்றி அதிர்ச்சி தரும் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முண்டக்கை கிட்டத்தட்ட ஒரு சிறிய நகரம். வீடுகள், ரிசார்ட், ஓட்டல் என 200க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இருந்தன. சுற்றிலும் தேயிலை எஸ்டேட். அங்கு வேலை பார்த்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சேலம், திருநெல்வேலி மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் என்கின்றனர். இது தவிர கேரள மற்றும் வெளிமாநில மக்களும் இருந்துள்ளனர். நிலச்சரிவுக்கு பிறகு முண்டக்கையை உடனே நெருங்க முடியவில்லை. ட்ரோன் மூலம் அந்த இடத்தை சோதனை செய்த போது, மீட்பு படையினர் திடுக்கிட்டனர். நிலச்சரிவில் மொத்த முண்டக்கையும் அழிந்து விட்டது. ஒரே ஒரு கட்டடம் மட்டுமே ட்ரோன் காட்சியில் சிக்கியது. அந்த கட்டடம் பள்ளி வாசல் என்பது தெரியவந்துள்ளது. மற்றபடி ட்ரோன் மூலம் எந்த கட்டுமானத்தையும் பார்க்க முடியவில்லை. அங்கு இருந்த சிவன் கோயில், மாரியம்மன் கோயில்களும் தென்படவில்லை. அங்கிருந்தவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதுபற்றி மீட்பு படையினர் கூறியது: முண்டகையில் இப்போது கைகளில் எடுத்துச்செல்லக்கூடிய கருவிகளை வைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோம். முண்டக்கை முழுதும் நிலச்சரிவு குவியல் தான் கிடக்கிறது. தற்காலிக பாலம் வழியாக பொக்லைன் உள்ளிட்ட முக்கிய இயந்திரங்களை கொண்டு வந்த பிறகு தான் நிலச்சரிவு குவியலை தோண்ட முடியும். அந்த குவியலில் கொத்து கொத்தாக சடலங்கள் இருக்கக்கூடும் என்று கருதுகிறோம். அதே போல் ஏற்கனவே மீட்கப்பட்ட 280 சடலங்களில் இதுவரை 82 பேர் அடையாளம் தான் தெரிந்துள்ளது. அதிலும் பலர் முண்டக்கையை சேர்ந்தவர்களாக இருக்கலாம். காரணம் இங்கு ஏற்பட்ட நிலச்சரிவு சூரல்மலை வரை போய் விழுந்தது. அப்படியே சாலியாற்றில் பலர் அடித்து செல்லப்பட்டனர். சாலியாற்றில் மீட்கப்பட்ட சடலங்களில் முண்டக்கையை சேர்ந்தவர்களும் இருக்கலாம். முண்டக்கை நிலச்சரிவை தோண்டி பார்த்தால் நிச்சயம் பலி எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என்று மீட்பு படையினர் கூறினர். இங்கு இருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால், மரணம் அடைந்தவர்கள் பட்டியலில் தமிழர்கள் எண்ணிக்கையும் கணிசமாக இருக்க வாய்ப்புள்ளது என்று அதிர வைத்துள்ளனர் உள்ளூர் தன்னார்வலர்கள்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை