ஆச்சரியப்பட வைக்கும் வந்தே மெட்ரோ ரயில் வசதிகள் | Vande Metro | Chennai
சென்னை பெரம்பூர் ஐசிஎப் ஆலையில் வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி கடந்த மாதம் முடிந்தது. 200 கிலோமீட்டர் துாரம் வரை உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. 12 பெட்டிகள் உடைய இந்த ரயிலில் ஏசி வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கை வசதிகள் உள்ளது. கூடுதலாக கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் வசதிகளும் உண்டு. முதலில் சென்னை கடற்கரை-காட்பாடி இடையே இந்த ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆக 04, 2024