உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேசத்தில் இந்தியர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் bangladesh | jaishankar| Rajyasabha

வங்கதேசத்தில் இந்தியர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் bangladesh | jaishankar| Rajyasabha

வங்கதேசத்தில் இந்தியர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் bangladesh | jaishankar| Rajyasabha வங்கதேச கலவரம் மற்றும் ஷேக் ஹசீனா இந்தியா வந்தது தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் 4ம் தேதி தீவிரமடைந்தது. போலீசார் தாக்கப்பட்டனர். காவல் நிலையங்கள் உட்பட அரசின் சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆட்சியில் தொடர்புடைய தனிநபர்களின் சொத்துகளும் நாடு முழுவதும் கொளுத்தப்பட்டன. பல இடங்களில் சிறுபான்மையினர், அவர்களின் தொழில் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டன. 5ம் தேதி ஊரடங்கு உத்தரவை மீறி டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். இதன் காரணமாக, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய பின், பிரதமர் ஷே க் ஹசீனா பதவி விலகினார். இந்தியாவுக்குள் தம்மை அனுமதிக்க வேண்டும் என்று மிக குறுகிய இடைவெளியில் ஷேக் ஹசினா கோரிக்கை விடுத்தார். தற்காலிக அடிப்படையில் அவர் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் டெல்லிக்கு வந்தார். வங்கதேசத்தில் நமது தூதரங்கள் மூலம் இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு 19000 இந்தியர்கள் இருக்கிறார்கள். அதில் 9000 பேர் மாணவர்கள். பெரும்பாலான மாணவர்கள் ஜூலையிலேயே இந்தியா திரும்பி விட்டனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நிலைமை தொடர்பாகவும் கண்காணித்து வருகிறோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கவலை கொள்கிறோம். விரைவில் அங்கு இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறோம். எல்லைகளில் உள்ள நமது பாதுகாப்பு படையினர் அலர்ட் செய்யப்பட்டு உள்ளனர். வங்கதேச அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என ஜெய்சங்கர் கூறினார்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை