உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் சிக்கினான் தேடப்படும் பயங்கரவாதி | Rizwan Ali | Delhi Police | NIA | Independence Day

டில்லியில் சிக்கினான் தேடப்படும் பயங்கரவாதி | Rizwan Ali | Delhi Police | NIA | Independence Day

டில்லியில் சிக்கினான் தேடப்படும் பயங்கரவாதி | Rizwan Ali | Delhi Police | NIA | Independence Day ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு புனேவில் ஆட்களை சேர்த்து வந்தவர்களில் ஒருவன் ரிஸ்வான் அலி. டில்லி ஜாமியா மிலியா முஸ்லிம் பல்கலையில் படித்த ரிஸ்வான் 2ம் ஆண்டோடு படிப்பை நிறுத்தி பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான். புனேவில் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஐ.இ.டி. என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரித்தான். சில ஆண்டுகளுக்கு முன் புனேவில் இருந்து சதித்திட்டம் தீட்டிய இந்த குழுவை சேர்ந்த ஏழு பேர் கைதாகினர். துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது ரிஸ்வான் உள்ளிட்ட 2 பேர் தப்பியோடினர். இந்த வழக்கை முதலில் மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் விசாரித்தது. தலைமறைவான ரிஸ்வானை பிடிக்க வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் ரிஷ்வான் மற்றும் அவனது கூட்டாளிகள், மஹாராஷ்டிரா, குஜராத், டில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்தது. இதற்காக வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சிகள், காடுகளில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி, ஆயுதங்கள் வாங்க நிதி திரட்டும் செயல்களில் ஈடுபட்டு இருப்பதும் தெரிந்தது. ரிஸ்வான் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்து தேடுதல் பணிகளை என்ஐஏ முடுக்கி விட்டது. அவனது சொத்துக்கள் முடக்கப்பட்டன. ரிஸ்வான் குறித்து தகவல் சொன்னால் 3 லட்சம் சன்மானம் என அறிவித்தனர். இந்த சூழலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டில்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தீவிர வாகன தணிக்கையில் டில்லி சிறப்பு போலீசாரிடம் ரிஸ்வான் நேற்று சிக்கினான். தேடப்பட்டு வந்த பயங்கரவாதி டில்லியில் சுற்றி திரிந்தது ஏன்? சுதந்திர தினத்தன்று நாச வேலையில் ஈடுபட சதி உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. ரிஸ்வானை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !