வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்த்து மோடி கலங்கிய காட்சி | wayanad landslide | Modi visits landslide
வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்த்து மோடி கலங்கிய காட்சி | wayanad landslide | Modi visits landslide நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் மரணம் அடைந்தனர். நிலச்சரிவு பாதிப்பு பகுதியை பார்வையிட பிரதமர் மோடி கேரளா சென்றார். கண்ணூர் ஏர்போர்ட்டில் அவரை கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், எம்பி சுரேஷ் கோபி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாட்டுக்கு மோடி புறப்பட்டார். நிலச்சரிவு நடந்த சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட பகுதியை ஹெலிகாப்டரில் இருந்தபடி மோடி பார்வையிட்டார். அவருடன் கவர்னர் ஆரிப், முதல்வர் பினராயி, எம்பி சுரேஷ் கோபி ஆகியோரும் இருந்தனர். நிலச்சரிவு நடந்த விதம், முண்டக்கை ஊர் இருந்த இடம், மக்கள் பாதிப்பு குறித்து 3 பேரும் மோடிக்கு விளக்கம் அளித்தனர். அந்த தகவல்களை கேட்டு மோடி வேதனை அடைந்தார். நிலச்சரிவு காட்சிகளை அவர் உருக்கத்துடன் பார்வையிட்டார்.